பாரத பிரதமரின் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் ஒரு இலவச பயிற்சி மையம்
கோவை அவிநாசிலிங்கம் கல்வி நிறுவனம் பெண்கள் முன்னேற்றத்திற்காக 1957 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. எங்களது நிறுவனம் பெண்கள் வாழ்க்கைத்தரம் மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டு இன்றுவரை வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கு பெண்களுக்கான பலவிதமான உயர் கல்வி அளிக்கப்படுகிறது. 1987இல் எங்களது நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக பாரத பிரதமரின் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் ஒரு இலவச பயிற்சி மையம் ஐயா அவினாசிலிங்கம் நகர் வளாகத்தில் (வரப்பாளையம்) அமைக்கப்பட்டுள்ளது. பயிற்சி மையம் அனைத்து வசதிகளுடன் இருப்பதால் மத்திய அரசின் PMKVY பயிற்சித் திட்டத்தில் 5 ஸ்டார் தரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இப்பயிற்சி மையத்தில்
- கம்ப்யூட்டர் கிராபிக் டிசைனர்
- கம்ப்யூட்டர் டெக்னீசியன்
ஆகிய இரு பயிற்சிகள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதன் ஒவ்வொன்றின் பயிற்சி காலம் 3 மாதங்கள் மட்டுமே. பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு சிறந்த தனியார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
பயிற்சி தவறாமல் வருபவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 100/-, நாள் ஒன்றுக்கு அவர்களது வங்கி கணக்கில் அரசாங்கத்தால் செலுத்தப்படும். இந்த இலவச பயிற்சியில் சேர்ந்து அல்லது உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்தி அவர்களும் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இப்பயிற்சியில் முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், இலங்கை அகதிகள், ஆதரவற்றோர், மற்றும் விதவை, ஆகியோருக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.
தேவையான சான்றிதழ்கள்:
- மாற்றுச்சான்றிதழ் (TC)
- கம்யூனிட்டி சர்டிபிகேட் (CC)
- 10th, +2, (பிளஸ் 2), ITI (ஐடிஐ), Diploma (டிப்ளமோ)
- ஆதார் கார்டு
- பேங்க் பாஸ்புக்
- பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2No.s
இன்னும் ஒரு வாரத்தில் பயிற்சி ஆரம்பிக்கப்பட உள்ளதால் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
கீழ்கண்ட மொபைல் நம்பரில் அணுகவும் - 99401 63309, 9443652220.